கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறை போராட்டம் (படங்கள்)

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறை போராட்டம் (படங்கள்)

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறை போராட்டம் இன்று (22) ஆரம்பமானது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்தீரீஸ்வரர் ஆலய வளாகத்தில் குறித்த அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதை அடுத்த இன்று காலைமுதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மத தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

administrator

Related Articles