கிளிநொச்சி பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படும் – முதல் நாளே கொரோனா அச்சுறுத்தல்

கிளிநொச்சி பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படும் – முதல் நாளே கொரோனா அச்சுறுத்தல்

கிளிநொச்சி மாவட்ட பாட சாலைகள் அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சிப் பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் இன்று முதல் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles