கிளிநொச்சி மணியங்குளம் கிராமத்துக்குள் யானைகள் அட்டகாசம் (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கந்தபுரம் மணியங்குளம் கிராமத்துக்குள் யானைகள் புகுந்து ஏற்படுத்திய அழிவினால் நூறுவரையான தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

குறித்த அசம்பாவிதம் கடந்த இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே வயல் காணிகளுக்குள்ளும் யானைகள் நுழைந்து அழிவுகளை ஏற்படுத்தமுற்பட்டவேளை மக்களால் யானைகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நடவடிக்கை தொடர்வதால் யானை வேலிகளை அமைத்து தமது கிராமத்தினை யானைகளிலிருந்து பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்தக் கிராமத்து மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

administrator

Related Articles