கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட விளையாட்டுக் குழுக்களை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் (படங்கள்)

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட விளையாட்டுக் குழுக்களை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் (படங்கள்)

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட விளையாட்டுக் குழுக்களை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் குறித்த நிகழ்வு இன்று (16) காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களின் விறையாட்டு திறமைகளை தேடிச்செல்லும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தற்போது இடம்பெற்ற வருகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் விருப்பம் மற்றும் தகுதி அடிப்படையில் பொருத்தமான விளையாட்டு துறைக்குள் அழைத்து செல்லும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது.

இதன் போது விர வீராங்களைகளின் உடல், ஆற்றல், திறமை ஆகியவற்றை கணித்து அவ்வந்த விளையாட்டு சார்ந்த துறைக்குள் அழைத்து செல்வதற்கான செயல்முறை பரீட்சைகளும் இடம்பெற்றன. 

15 தொடர்ககம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் குறித்த தேசிய வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு குழுக்கள் அமைத்து அங்குராற்பணம் செய்யும் நிகழ்வு இன்று (16) இடம்பெற்றது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குறுித்த வேலைத்திட்டத்தின் இவ்வாண்டுக்கான தேசிய வேலைத்திட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles