சீறும் கிம், மௌனம் காக்கும் பைடன்…மோதல் உச்சத்தில்

சீறும் கிம், மௌனம் காக்கும் பைடன்…மோதல் உச்சத்தில்

தங்கள் மீதான விரோத உணர்வை அமெரிக்கா கைவிடாத வரையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவை அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு, அந்த நாட்டுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கமான உறவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கேற்ப வடகொரியாவை பல்வேறு வழிகள் மூலம் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தது.

ஆனால் தங்கள் மீதான விரோத உணர்வை அமெரிக்கா கைவிடாத வரையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என வடகொரியா நிராகரித்ததுள்ளது.

இந்த நிலையில், கடந்த 21 ஆம் திகதி குறுகிய தூர 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதித்தது.

ஆனால் இந்த செயற்பாட்டை ஆத்திரமூட்டும் செயலாக பார்க்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வடகொரியா அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.
நேற்று (25) கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை வட கொரியா அடுத்தடுத்து ஏவி பரிசோதித்ததுள்ளது.

இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கி.மீ. தொலைவுக்கு பறந்து கடலில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு பேரவை கடும் தடை விதித்துள்ள போதும், அந்த தடையை மீறி வடகொரியா நேற்று ஒரே நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது.

administrator

Related Articles