குளவிக்கொட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பழைய முறையே!பிரதீப்குமார் தெரிவிப்பு.

குளவிக்கொட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பழைய முறையே!பிரதீப்குமார் தெரிவிப்பு.

தேயிலைத்தோட்டங்களில் அதிகரித்து வரும் குளவி கொட்டுக்கு இழக்காகி பல தோட்டத்தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர்.சிலரின் உயிர்களும் பறிபோகின்றது இந்நிலமை மாற தோட்டப்பகுதிகளிலில் பழைய முறையை அறிமுகப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் தமிழ் இணைப்பாளர் ஜெயராஜ் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஆரம்பகாலங்களில் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் போது குளவிகூட்டை கலைக்க இருவர் தோட்டநிர்வாகத்தால் நியமிக்கப்படுவர் ஆனால் அம்முறை தற்போது காணப்படுவதில்லை.தோட்டங்களும் காடாகியுள்ளமையால் அட்டை,சிறுத்தை,பன்றி என பல பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துறையாடி இதற்கான தீர்வை விரைவில் எடுப்பதாக எஸ்.பி.திஸாநாயக்க கூறியதாக ஜெயராஜ் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles