கெசல்கமுவ ஆறு கறுப்பு நிறமாவதற்கு காரணம் என்ன? வெளிவரும் அதிர்ச்சி தகவல் (படங்கள்)

கெசல்கமுவ ஆறு கறுப்பு நிறமாவதற்கு காரணம் என்ன? வெளிவரும் அதிர்ச்சி தகவல் (படங்கள்)

பொகவந்தலாவ காசல்ரீ ஆற்றுடன் கலக்கும் கெசல்கமுவ ஆற்றில் கழிவு தேயிலை நீர் கலப்பதால் ஆற்று நீர் கறுப்பு நிறமாக காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொகவந்தலாவ பகுதியில் செயற்படும் தேயிலை தொழிற்ச்சாலை ஒன்றிலிருந்தே கழிவு தேயிலை நீர்; கெசல்கமுவ ஆற்றில் கலப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் மிகவும் சூட்சுமமான முறையில் இவ்வாறு கழிவு நீரை வெளியேற்றுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கறுப்பு நிறத்தில் ஆற்று நீர் வருவதால் நீரை பயன்படுத்துவோர் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறு கெசல்கமுவ ஆறு கழிவு நீரினால் மாசடைவது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

administrator

Related Articles