“கொடுத்த கலைமாமணி விருதை அவுங்க ரிட்டன் வாங்க வைக்காதீங்க” சிவ கார்த்திகேயன்!!

“கொடுத்த கலைமாமணி விருதை அவுங்க ரிட்டன் வாங்க வைக்காதீங்க”  சிவ கார்த்திகேயன்!!

அன்மையில் தமிழ் நாடு அரசினால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இந்த விருது கிடைக்கபெற்ற சூட்டோடு சூடாக அவரது டாக்டர் படத்திற்கான பாடல் குறித்து பேசுவதற்காக இசையமைப்பாளரான அனிருத் வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு சோபாவில் படுத்து இருந்த இயக்குனர் நெல்சனிடம் பாடல் ரெடியா என நடிகர் சிவ கார்த்திகேயன் கேட்கிறார்.

” எங்க அவர் பாட்டை கேட்டால் செகன்ட் லைனோடு இருக்கிறாரு.. ” கிண்டலாக சொல்ல வெளியே அனிருத் வருகிறார்.

அந்நேரம் பாடல் குறித்த முடிவு எடுக்கும் போது பாடலை யார் எழுத போகிறார்? என இசையமைப்பாளரான அனிருத் கேட்கிறார்.

அப்போது நெல்சன் உடனடியாக கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் எழுதுவார் என சொல்லும் போது..

” கொடுத்த கலைமாமணி விருதை அவங்க ரிட்டன் எடுக்க வைக்க வரைக்கும் சும்மா இருக்க மாட்டீங்க போல ” என நகைச்சுவையாக சொல்கிறார்.

அந்த சம்பாஷனை வீடியோ உங்களுக்காக

administrator

Related Articles