கொட்டகலையில் பாடசாலைகளை குறி வைக்கும் கொரோனா, இன்றும் 14 பேருக்கு கொவிட்

கொட்டகலையில் பாடசாலைகளை குறி வைக்கும் கொரோனா, இன்றும் 14 பேருக்கு கொவிட்

கொட்டகலையில் மேலும் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

பிரதேசத்தில் நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இன்று (25) புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மற்றும் கிரேட் வெஸ்டன் லூசா பிரிவில் ஆசிரியருக்கும், மாணவர்கள் அறுவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கொட்டகல லோக்கில் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்ப்பை பேணியவர்களே இவ்வாறு புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கொட்டகலை மற்றும் கிரேட் வெஸ்டன் ஆகிய பாடசாலைகளில் பயிலும் மாணவர்களே அதிகம் தொற்றுக்குள்ளவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே சுகாதார அமைச்சின் சுகாதார வழிக்காட்டல்களை முறையாக பின்பற்றுமாறு மாணவர்களையும், ஆசிரியர்களையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுள்ளது.

administrator

Related Articles