கொட்டகலை தமிழ் வித்தியாலய அதிபருக்கு கடும் எச்சரிக்கை, காரணம் என்ன? (படங்கள்)

கொட்டகலை தமிழ் வித்தியாலய அதிபருக்கு கடும் எச்சரிக்கை, காரணம் என்ன? (படங்கள்)

கொட்டகலை தமிழ் வித்தியாலய அதிபருக்கு பிரதேச பொது சுகாதார அதிகாரிகளால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் கொவிட் வழிக்காட்டல்களை முறையாக பின்பற்றுமாறே கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை சுகாதார பரிசோதகர்கள் திம்புல பொலிஸாருடன் இணைந்து மேற்படி பாடசாலையில் இன்று (23) மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் போதே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் 10 ஆசிரியர்களுக்கும் 10 மாணவர்களுக்கும் கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அந்த பாடசாலையில் தொடர்ந்தும் சுகாதார வழிக்காட்டல்கள் பின்பற்றப்படுவதில்லை என பெற்றோரும், பழைய மாணவர்களும் குற்றம் சுமத்தியதற்கமையவே இன்று திடிர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்த முறைப்பாட்டுக்கமைய இன்று (29) பரிசோதனை நடத்திய கொட்டகலை சுகாதார பரிசோதகர்கள் நிலைமையை அவதானித்து பாடசாலை அதிபரை கடுமையாக எச்சரித்துள்ளனர்.

administrator

Related Articles