கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல் விவகாரம்- ஹக்கீம் தெரிவித்துள்ளது என்ன?

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல் விவகாரம்- ஹக்கீம் தெரிவித்துள்ளது என்ன?

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் நல்ல முடிவை எடுக்கும் அறிவிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப்ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் நாட்டின் முஸ்லீம் சமூகத்தினருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இதற்கு உரிய தீர்வை முன்வைக்கும்; என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


முஸ்லீம் சமூகத்தின் வேண்டுகோள்களை புறக்கணித்து சுகாதார அமைச்சு விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்படாத ஆதாரங்களின் அடிப்படையில் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் உடல்களை புதைப்பது என்பது முஸ்லீம் மக்களின் மதநம்பிக்கையின் முக்கியமான பகுதி என அவர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles