கொரோனா சட்டத்தை மீறி “Drive-in ” வழிப்பாடு நடத்திய மெனிடோபா ஆலயத்தை சுற்றிவளைத்த பொலிசார்!

கொரோனா சட்டத்தை மீறி “Drive-in ” வழிப்பாடு நடத்திய மெனிடோபா ஆலயத்தை சுற்றிவளைத்த பொலிசார்!

மெனிடோபா மாகணத்தில் கொரனா அமுல் படுத்த பட்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு சவால் விடும் முகமாக அந்த மாகணத்தின் ஸ்டேய்ன் நகரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயமொன்று தமது ஆலய வழிப்பாடுகளை டிரை வின் முறையில் நடத்த தீர்மானித்தது.

இதற்கமைய நேற்று ஆலய பேஷ்புக் பக்கத்தில் டிரை வின் வழிப்பாடு நடைப்பெற இருப்பதாக அறிவித்தது. ஆயினும் இது சட்டத்திற்கு விரோதமானது என மாகண அரசு உடனடியாக தெரிவித்து இருந்தது

ஆனாலும் இதனை மீறி இன்று காலை 100 ற்கும் மேற்பட்ட கார்கள் பெருந்தெருவின் ஒரத்தில் நின்றன.அதில் இருந்தவர்கள் வழிப்பாடுகளை ஆரம்பிக்க RCMP பொலிசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து வழிப்பாடுகளை நிறுத்தியதுடன் வீதி சட்டத்தை மீறும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அகற்றவும் நடவடிக்கை எடுத்தனர்.

இதனை ஆலய மக்கள் எதிர்த்தனர். இந்த ஆலயத்தின் போதகருக்கு ஏற்கனவே கொரோனா சட்டத்தை மீறியதற்காக $5000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெனிடோபாவில் கொரோனா காரணமாக இன்றூ10 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் அரச சட்டங்களை மதிக்க வேண்டியது நம்மையே பாதுகாக்கும் என மெனிடோபா மக்கள் கூறுகிறார்கள்

administrator

Related Articles