கொரோனா தடுப்பு ஊசியை இராண்டவதாக பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர் !

கொரோனா தடுப்பு ஊசியை  இராண்டவதாக பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர் !

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

மார்கரெட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்கு முதலாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் 91வயதாகும் மார்கரெட் கீனன் “இது சிறந்த பிறந்த நாள் பரிசு” எனத் தெரிவித்துள்ளார்

.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.

முக்கியான விடயம் இரண்டாவது தடுப்பு ஊசியை பெற்றவர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற 81வயது முதியவர்.

administrator

Related Articles