கொரோனா தடுப்பு மருந்துகளை உடனடியாக விநியோகிப்பதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படுகின்றன!!

கொரோனா தடுப்பு மருந்துகளை உடனடியாக விநியோகிப்பதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படுகின்றன!!

கொரோனா தடுப்பு மருந்துகளை உடனடியாக விநியோகிக்கும் பொறிமுறைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக கனேடிய மத்திய பொது சேவைகள் அமைச்சர் அனித்தா ஆனந்த் கூறுகிறார்.

ஆயினும் இந்த தடுப்பு மருந்துகள் எப்போது தங்களது கைகளுக்கு கிடைக்கும் என்ற காலத்தை சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சகல மக்களுக்கும் இந்த மருந்தை வழங்க முன்னேற்பாடுகள் நடக்கின்றன. கனடா சுகாதர நிறுவனம் இதற்கான அங்கீகாரத்தை வழங்கிய அடுத்த நிமிடமே தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பமாகும்.

தற்போது வர இருக்கும தடுப்பு மருந்துகளான Pfizer, Moderna அதிக குளிரசாதன வசதி அவசியமாகிறது. இதற்கான தேர்மல் குளிர்சாதனங்களில் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த தடுப்பு மருந்துகள் பல்வேறான விநியோகஸ்தர்களிடம் தாங்கள் கொள்வனவு இருப்பதாக சொன்ன அமைச்சர் இந்த தடுப்பு மருந்துகளை ஏற்றுவதற்கான ஊசி , கை உறைகள், பஞ்சுகள் உடப்பட இதர பொருட்களை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதல் காலண்டில் 6 மில்லியன் தடுப்பு மருந்துகளை கனேடிய அரசு எதிர்பார்க்கின்றது

administrator

Related Articles