கொரோனா தொற்றுக்குள்ளான யாழ் மேயர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி கொண்டு செல்லப்பட்டார்!!

கொரோனா தொற்றுக்குள்ளான யாழ் மேயர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி கொண்டு செல்லப்பட்டார்!!

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் Covid 19 நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக இன்று மதியம் கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டார்.

யாழ் மேயர் நேற்றைய தினம் PCR பரிசோதனைக்கு உட்பட்ட போது அவருக்கு கொரோனா பாசிடிவ் இருப்பது அறியப்பட்டது.

இவர் விரைவில் நலன்பெற வேண்டும்.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் கோரிக்கை

இன்று எனக்கு மேற்கொண்ட கோவிட்-19 பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் என்னோடு கடந்த ஒரு வாரத்திற்குள் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாக முன்வந்து PCR பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ளுங்கள். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் நல்லூர்- ‭+94 (77) 121 0685‬, யாழ்ப்பாணம்- ‭+94 (77) 292 0280‬, hotline-tel: 021 222 6666. நான் நலமோடு உள்ளேன். என மேயர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles