கொழும்பு மக்களுக்கான அறிவிப்பு

கொழும்பு மக்களுக்கான அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சில நாளைய தினம் (28) முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தின் மருதானை, டேம் வீதி மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (28) அதிகாலை 05 மணி தொடக்கம் விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் வேகந்த மற்றும் ஹுனுபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள், வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவின் மயூரா பிளேஸ் பகுதி, பொரளை பொலிஸ் பிரிவின் கல்கஹவத்தை மற்றும் காளிபுள்ளை வத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், வெல்லம்பிட்டி லக்சந்த செவண தொடர்மாடி குடியிருப்பு ஆகியன நாளை அதிகாலை 05 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,,நாளைய தினம் (28) முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை அதிகாலை 05 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக காணப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles