கொழும்பை தூக்கி அடித்த காலிக்கு செம ஜாலி!

கொழும்பை தூக்கி அடித்த காலிக்கு   செம ஜாலி!

ஹம்பாந்தோட்டையில் நடைப்பெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் காலி அணி இரண்டு விக்கட்களால் வெற்றியீட்டியது . இதில் காலி அணியின் பின்வரிசை வீரரான லக்ஸான் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்திலும் பிராசித்தார். இவரது திறமையை விளையாட்டு விமர்சகர்கள் பாரட்டுகிறார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி முதலில் கொழும்பு கிங்ஸ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

நட்சத்திர வீரர்களை கொண்ட கொழும்பு அணி பெரிய ஓட்ட எண்ணிக்கையை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு இன்னைக்கு நாள் சரியில்ல என்றே சொல்ல முடியும் .

டி.ஜே பெல்லை தவிர மற்ற எந்த வீரர்களும் பெரிதாக ஓட்டங்கள் எதனையும் பெற வில்லை அவர் மட்டுமே அதிரடியாக ஆடி 70 ஓட்டங்களை பெற்றார்.

ஏனைய வீரர்கள் காலி அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரயில் வண்டி மாதிரி அடுத்த தடுத்தாக ஆட்டமிழந்தனர். எப்படியோ. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை கொழும்பு கிங்ஸ் அணி பெற்றார்கள்

காலி அணி சார்பாக பந்துவீச்சில் லக்சான் சந்தகேன் 3 விக்கெட்க்களையும் , தனஞ்செய லக்ஸான் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி 19 .5 ஓவர்களில் தனஞ்செய லக்ஸானின் திறமையான துடுப்பாட்டம் காரணமா 8 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

அவர் 31 ஓட்டங்களை பெற்றது மட்டுமன்றி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

காலி அணியின் வெற்றி குறித்து

administrator

Related Articles