கொவிட் அச்சுறுத்தல்: ஒத்தி வைக்கப்பட்டது உலக கிண்ண தகுதி சுற்று

கொவிட் அச்சுறுத்தல்: ஒத்தி வைக்கப்பட்டது உலக கிண்ண தகுதி சுற்று

7 ஆவது உலக கிண்ண தொடருக்கான தகுதிகான் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தொடரும் கொரோனா பரவல் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கான ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்று அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை குவைத்தில் நடத்தப்பட இருந்தது.

இதில் பக்ரைன், குவைத், மாலைத்தீவு, கட்டார், சவுதி அரேபியா ஆகிய அணிகள் பங்கேற்க இருந்தன.

இந்த நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதி சுற்று ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஐ.சி.சி.அறிவித்துள்ளது.

அதே போல் ஆப்பிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று ஏ, பி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த போட்டியும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles