கொவிட் நடைமுறைகளை எதிர்த்து கல்கரியில் நூற்றுகணக்கானோர் போராட்டம்!

கொவிட் நடைமுறைகளை எதிர்த்து  கல்கரியில் நூற்றுகணக்கானோர் போராட்டம்!

ஆல்பர்ட்டா மாகண அரசாங்கத்தின் கொவிட் கட்டுப்பாடுகள் குறிப்பாக பேஸ் மாஸ்க் அதாவது முக கவசம் உட்பட மாகண அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த் து ” Walk for freedom ” என்ற அமைப்பினர் கல்கரியில் நூற்றுக்கணக்கான மக்களுடன் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினார்கள்.

கல்கரி Downtown ல் அமைந்துள்ள மாநகரசபை மண்டபத்திற்கு முன்பாக சுமார் 300 பேர் வரை கூடி அரசாங்கத்தின் கொவிட் நடைமுறைகளை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால் அரசாங்க சட்டத்தின் பிரகாரம் 10 பேருக்கு மேலதிகமாக இவர் இருந்தாலும் $1000 முதல் 100,000 வரை டொலர் அபராதம் விதிக்கப்படும் என மாகண முதல்வர் கூறியிருக்கும் சமயத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் எட்மன்டன் , ரெட்டியர், கேன்சர் நகரங்களிலும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இது குறித்து மாகண லிபரல் கட்சி தலைவர் சமூக வலைத்தளம் ஊடாக விமர்சித்துள்ளார்.

administrator

Related Articles