கொவிட் முடக்க நிலைக்கு எதிராக கியூபெக்கில் போராட்டம்

கொவிட் முடக்க நிலைக்கு எதிராக கியூபெக்கில் போராட்டம்


கொவிட் முடக்க நிலைக்கு எதிர்ப்பை வெளியிட்டு கியூபெக்கில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கின் மொன்ட்றயலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பிரசன்னமாகியிருந்த நிலையில் இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

கொவிட் முடக்க நிலைமைகளை தளர்த்த வேண்டுமென கோரியே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக இடைவெளி பேணாமை, முகக் கவசம் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

மாகாணம் முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த வேண்டுமென போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

administrator

Related Articles