கொவிட் மூன்றாம் அலையில் இருக்கின்றோம் – ஒன்றாரியோ மருத்துவர்கள்

கொவிட் மூன்றாம் அலையில் இருக்கின்றோம் – ஒன்றாரியோ மருத்துவர்கள்


கொவிட் மூன்றம் அலையில் தற்போது இருப்பதாக ஒன்றாரியோவின் முன்னணி மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒன்றாரியோவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் டேவிட் வில்லியம்ஸ் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக மாகாணத்தில் கொவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை 1500ஐ கடந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கொவிட் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது எனவும் இது எந்த மாதிரியான அலை என்பதே மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் ஐந்து வாரங்களின் பின்னர் அதி கூடிய தொற்றாளர் எண்ணிக்கையாக 1553 என நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை பதிவானதடன், 15 மரணங்களும் பதிவாகியிருந்தது.

administrator

Related Articles