கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் புதிய நடைமுறை!

கொவிட் 19  பரவலை கட்டுப்படுத்த நாளை  முதல் புதிய நடைமுறை!

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கொவிட் 19 மேலும் பரவாத வகையில் புதிய நடைமுறைகளை அமுல்ப்படுத்த ஆல்பர்ட்டா மாகண அரசாங்கம் தீர்மாணித்துள்ளது.

ஆபத்தான கட்டத்தை ஆல்பர்ட்டா மாகணம் எதிர் நோக்கி இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்தும் முகமாக நாளை நவம்பர் 13 ஆம் திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரையான இரண்டு வார காலங்களுக்கு புதிய நடைமுறை இருக்கும் என மாகண முதல்வர் ஜெசன் கெனி கூறியுள்ளார்.

இதன்படி உள்ளக உடற்பயிற்சி, டீம் விளையாட்டு, குழு செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.மேலும் ரெஸ்டைரண்டு பார்கள் திறந்து வைத்திருக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடை முறை கல்கரி மற்றும் அதனை அண்டிய நகரங்கள் , எட்மன்டன் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் ,, போர்ட் மெக்மெரி, ரெட் டியர் , லெத்பிரிட்ஜ் , கிராண்ட் பெரி ஆகிய நகரங்களில் இந்த புதிய நடை முறை உடனடி அமுலுக்கு வருகிறதாக அவர் கூறினார்.

administrator

Related Articles