கோட்டா மீது சுதந்திரக் கட்சி கொண்டுள்ள காதல் எப்படியானது தெரியுமா?

கோட்டா மீது சுதந்திரக் கட்சி கொண்டுள்ள காதல் எப்படியானது தெரியுமா?

அரசாங்கத்தோடு இணைந்து பயணிப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (25) இரவு இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளர்.

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து முன்னோக்கி பயணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தின் பின்னரே சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் இன்று (26) சுதந்திரக் கட்சியின் பரிந்துரைகள் சமர்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

administrator

Related Articles