கோலியின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தடுமாறும் இந்தியா ! முதல் நாளில் 6/233 ஓட்டங்கள்

கோலியின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தடுமாறும் இந்தியா ! முதல் நாளில் 6/233 ஓட்டங்கள்

அடிலெய்டில் இன்று ஆரம்பமான இந்திய அவுஸ்திரேலிய அணிகளுகிடையலான சுனில் கவஸ்கர்- அலன் போர்டர் கிண்ணத்திற்கான நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ஓட்டங்களை பெற்றது.

பகல் இரவு போட்டியாக நடைப்பெறும் இந்த போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

ஆரம்ப ஜோடியாக களமிறங்கிய பிரதிவ் சாவ், மயாங் அகர்வால் பெரிதான நம்பிக்கையோடு துடுப்பெடுத்தாட களமிறங்கினார்கள். ஆனால் அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் ஸ்டார்கின் இரண்டாவது பந்துக்கே பிரதிவ் சாவ் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு ஆட வந்த புஜாரா அமைதியாக ஆமை வேகத்தில் ஆடி ரசிகர்களை மட்டுமல்ல விளையாட்டு வீரர்களின் பொறுமை சோதித்தார்.

அவர் நிதானமாக ஆடியதை பாரட்ட வேண்டும். தனது 148 பந்தில் அவர் முதல் பவுண்டரியை அடித்த போது அரங்கமே கை தட்டி மகிழ்ந்தது. அவர் அணித்தலைவர் விராத் கோலியுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.

அதன் பின்னர் ஆட வந்த ரெய்னேயும் விராத் கோலியும் அருமையாக ஆடினார்கள் நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக 88 ஓடுட்டங்களை பெற்றார்கள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக நேதன் லாய்ன் பந்து வீசிய போது ரெய்னே,அடித்த பந்து மிட் விக்கட் நோக்கி போன போது கோலி வேகமாக ஓட்டமொன்றை எடுக்க முட்பட்ட போது ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு இந்திய அணியின் வீரர்கள் பெரிதாக சொல்ல்மளவிற்கு ஆடவில்லை.

ஆட்ட நேர முடிவின் போது ஸ்கோர் விபரம்

இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ஓட்டங்கள்

புஜாரா 43 , விராத் கோலி 74, ரெய்னா 42 ஓட்டங்களை பெற்றனர். ரவிசந்திரன் அஸ்வின் ஆட்டமிழக்கமால் 15 ஓட்டங்களை பெற்று இருக்கிறார்.

administrator

Related Articles