சங்கராஜா மாவத்தையில் தீ, ஒருவர் பலி

சங்கராஜா மாவத்தையில் தீ, ஒருவர் பலி

சங்கராஜா மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (24) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மருதானை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட 248/30 இலக்க உணவகம் ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.

அந்த கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தமையே தீக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தீ பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 46 வயதான பலப்பிட்டிய பகுதியில் வசித்த ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கடையில் இருந்த ஏனையோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

எவ்வாறாயினும் கொழும்பு மாநகர சபையின் 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

administrator

Related Articles