சங்கா, மஹலவிற்கு 20000 டொலர் சம்பளம் வழங்கப்பட வேண்டும்

சங்கா, மஹலவிற்கு 20000 டொலர் சம்பளம் வழங்கப்பட வேண்டும்


இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹல ஜயவர்தன ஆகியோருக்கு தலா 20,000 அமெரிக்க டொலர்கள் சம்பளமாக வழங்கப்பட வேண்டுமென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டை நிர்வாகம் செய்யும் பொறுப்பு தமக்கு கிடைத்தால் கிரிக்கட்துறையை மேம்படுத்துவதற்கு அடிப்படை மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குமார் சங்கக்காரவை இலங்கை கிரிக்கட்டின் பணிப்பாளராகவும், மஹல ஜயவர்தனவை பிரதம பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதனை விடவும் உள்நாட்டைச் சேர்ந்த திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

administrator

Related Articles