சட்டவிரோதமாக மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!!

சட்டவிரோதமாக மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!!

இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த இந்திய மீனவ படகுகள் 5 கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களில் இருந்து 54 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

வடக்கு கடற்படையின் மூலம் யாழ்ப்பாணம் கோவிலன் பிரதேசத்தில் இருந்து 3 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத மீன்டிபிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பாரிய அளவிலான ஒரு மீன்பிடி வள்ளத்தில் இருந்த 14 இந்தியர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டள்ளனர்.

அதிலிருந்த சட்ட விரோத மீன்பிடி உபகரணங்கள் பிடிக்கப்பட்ட சுமார் 1030 கிலோ மீனையும் கடற்படையினர் பொறுப்பேற்றனர்.

வடக்கு மத்திய கடற்படை பிரிவினரால் மன்னார் பேசாலை பிரதேசத்தில் சுமார் 7 கடல் மைலுக்கு அப்பாலும், இரணைத்தீவுக்கு உட்பட்ட கடல் பகுதியில் சுமார் 5 கடல் மைலுக்கு அப்பால் பண்ணை முறையை பயன்படுத்தி நாட்டின் கடல் எல்லை பகுதிக்குள் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த 2 வள்ளங்கள் கைப்பற்றப்பட்டன. இதிலிருந்து 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கிழக்கு கடற்படையின் மூலம் கடல் எல்லையில் இருந்து சுமார் 62 கடல் மைலுக்குட்பட்ட நாட்டின் கடல் பகுதியில் பிரவேசித்து முல்லைத்தீவு பிரதேசத்தில் சுமார் 8 கடல் மைலுக்கு அப்பால் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த இந்திய 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீளவர்கள் தமிழ்நாட்டின் கரைப்பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெநிவிக்கின்றன.

administrator

Related Articles