சண்டியன் நீயா? நானா? கண்டி- காலி அணி போட்டியில் மோதல்! விறுவிறுப்பான ஆட்டம் காலிக்கோ ஏமாற்றம் (video)

சண்டியன் நீயா? நானா? கண்டி- காலி அணி போட்டியில் மோதல்!  விறுவிறுப்பான  ஆட்டம் காலிக்கோ ஏமாற்றம் (video)

ஹம்பந்தோட்டையில் நேற்று இரவு நடைப்பெற்ற கண்டி காலி அணிகளுகிடையாலன LPL. 6 வது போட்டியில் தமிழ் படங்களில் வருவதை போன்று மயிர் கூர் செறியும் சண்டையொன்று வர இருந்தது.

கண்டி அணியின் வீரரான நவின் உல் ஹக் மற்றும் மொகமட் அமீருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட இறுதியில் கைகலப்பாக மாறுமா என அஞ்சிய வேளையில் கண்டி அணியின் தற்காலிக தலைவராக செயற்பட்ட குசல் மென்டிஸ் ஓடி போய் சண்டையை நிறுத்தினார்.

இல்லாவிட்டால் இன்றைக்கு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போரை பற்றி எழுத வேண்டி இருக்கும்.

எல்லாமே கடைசி ஓவரில் மொகமட் அமிர் விலாசிய சிக்ஸ் தான் காரணம்

சரி போட்டிக்கு வருவோம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

கடந்த போட்டிகளில் விளையாட பிரண்டன் டெய்லர் இந்த போட்டியில் கண்டி அணி சார்பாக விளையாட போகிறார் என அறியாத காலி அணி கப்டன் சயீட் அப்ரிடி முடிஞ்சால் அடிங்கடா என பந்து வீச தொடங்கினார்.

கண்டி அணியின் ஆரம்ப ஜோடியான குசல் பெரேரா மற்றும் ரமனுல்லா பெரிசா ஒன்னுமே அணிக்காக செய்யாவிட்டாலும் குசல் மென்டஸ் மற்றும் பிரண்டன் டெய்லர் அணிக்காக பெறுமதியான ஓட்டங்களை குவித்தாகங்க.

கண்டி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 196. ஓட்டங்களை பெற்றது.

இதில் பிரண்டன் டெய்லர் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 49 பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் தனி மனித போராட்ட்டத்தை அழகாக காட்டியது.அந்த அணியை சேர்ந்த தனுஸ்க குணதிலக்க ஒரு பக்கம் தனியாக இருந்து ஆடி 83 ஓட்டங்களை பெற்றார்.

அவருக்கு துணையாக ஒருத்தரும் இருக்கவில்லை கடைசியிலே காலி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 மட்டுமே பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

தோல்விக்கு பிறகு பெவிலியன் திரும்பி கொண்டிருந்த மொகமட் அமீரை ஆப்கானிஸ்தான் வீரரான நவீன் உல் ஹக் சும்மா சீண்டி பார்த்தார்.அந்த சண்டை விளையாட்டு சண்டை என்பதால் வீடியோவை பார்த்து ரசிங்க

https://youtu.be/pmmfMrX8xBo

கண்டி அணியின் ஆட்ட நாயகன் பிரண்டன் டெய்லரின் பேட்டி

administrator

Related Articles