சதம் அடிக்காமல் உலக சாதனை படைத்த திக்வெல்ல

சதம் அடிக்காமல் உலக சாதனை படைத்த திக்வெல்ல


இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் திக்வெல்ல 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் நான்கு ஓட்டங்களினால் தனது கன்னி சதத்தை தவறவிட்டிருந்தார்.

உலக டெஸ்ட் கிரிக்கட் வீரர்களில் சதம் ஒன்றை பெற்றுக் கொள்ளாது கூடுதலாக அரைச்சதங்களைப் பெற்றுக் கொண்ட வீரர் என்ற சாதனையை திக்வெல்ல நிலைநாட்டியுள்ளார்.

இதுவரையில் நிரோசன் திக்வெல்ல 17 அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் இந்திய வீரர் சீ.பீ.எஸ் சௌஹான் 16 அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்டமையே உலக சாதனையாக காணப்பட்டது.

இந்த சாதனையை முறியடித்து திக்வெல்ல தற்பொழுது சதம் அடிக்காது கூடுதல் அரைச்சதங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

administrator

Related Articles