சபாஸ் சரியான போட்டி…3 ஆவது T20 போட்டியில் இந்தியாவை பழிவாங்கியது இங்கிலாந்து

சபாஸ் சரியான போட்டி…3 ஆவது T20 போட்டியில் இந்தியாவை பழிவாங்கியது இங்கிலாந்து

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்றிரவு (16) ஹகமதாபாத்தில் இடம்பெற்ற மூன்றாவது T20 போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து வெற்றிப் பெற்றுள்ளது.

T20 தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.

அதற்கமைய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் அணித் தலைவர் விராத் கோலி ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களை பெற்ற நிலையில் இங்கிலாந்தின் பந்து வீச்சில் மார்க் வூட் 3 விக்கெட்டுக்களையும், கிறிஸ் ஜோடன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களை பெற்று வெற்றிப் பெற்றது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில் ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களை பெற்ற நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சில் சாஹால் மற்றும் வொசின்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியுடன் இங்கிலாந்து 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்று இந்திய அணியை திக்குமுக்காட வைத்துள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜொஸ் பட்லர் தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 4 ஆவது போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி ஹகமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

administrator

Related Articles