“சம்பியன்” யாழ்! அணியில் இல்லை தமிழ்!!

“சம்பியன்” யாழ்! அணியில் இல்லை தமிழ்!!

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைப்பெற்ற முதலாவது LPL தொடரின் இறுதி போட்டியில் வடக்கின் ஒரே அணியாக பெயரளவில் கலந்து கொண்ட யாழ் அணி வெற்றி பெற்றது.

இந்த LPL தொடரில் உள்ளூர் வீரர்களுக்கு ஒரளவு வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும். ஆக குறைந்த பட்சம் அந்த பிரதேசங்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் இரண்டு வீரர்கள் இறுதி அணியில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும்

அவ்வாறு செய்வதன் மூலமே உள்ளூர் ரசிகர்கள் ஆர்வத்தோடு இந்த போட்டித்தொடர்களை உணர்ச்சிகரமாக ரசிப்பார்கள். இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கருத்தில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு உள்வாங்கப்படுவதன் மூலம் புதிய இளம் வீரர்களை அடையாளம் காண முடியும்.

இனி போட்டிக்கு வருவோம்..

யாழ் ஸ்டேலியன்ஸ் அணிக்கும் காலி அணிக்கும் இடையிலான இந்த போட்டியில் யாழ் ஸ்டேலியன்ஸ் 53 ஓட்டங்களால் வெற்றீட்டியது.

அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட யாழ் ஸ்டேலியன்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்றதும் ஆடுகளத்தின் ஈரத்தன்மையை உணர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பத்தில் திறமையாக ஆடிய யாழ் அணி 8. 4 ஓவர்களில் ஆரம்ப மூன்று வீர்களை 70 ஓட்டங்கள் பெற்று இருந்த போது இழந்தது .

அந்நேரம் ஆடுக்களம் வந்த தனஞ்செய டி சில்வா மறுபக்கத்தில் ஆடிய பாகிஸ்தானின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சொயிப் மாலிக்குடன் இணைந்து நிதானமாக துடுப்பெடுத்தாடினார்.. இவர்கள் இருவரும் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை 139 ஆக உயர்த்தினார்கள்

சொயிப் மலிக் 35 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரிகளை அடித்து 46 ஓட்டங்களை பெற்றார். 139 ஆக உயர்த்தினார்கள்.

அதேபோன்று தனஞ்செய டி சில்வா 20 பந்தைகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்களை பெற்றார்.

இவர்களுக்கு பிறகு ஆடுகளம் நுழைந்த அணித்தலைவர் திசர பெரேரரா புயலாட்டம் ஆடினார்.இவர் 14 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்களை ஆட்டமிழக்கமால் பெற்றதுடன் யாழ் அணியை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓடடங்களை பெற வழியமைத்தார்.

காலி அணி சார்பாக பந்து வீச்சில் தனஞ்செய லக்ஸான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது திறைமையை பலர் பாரட்டியது குறிப்பிடதக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி ஆரம்பத்தில் கெத்தாக களமிறங்கியது ஆனால் ஆரம்ப ஒவர்களிலே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக தனுஸ்க குணதிலக்கவை ரண் அவுட் மூலமாக இழந்ததை அடுத்து அணியை மீட்க யாராலும் முடியவில்லை ஆனால் அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஸ அதிரடி ஆட்டம் ஆடி 40 ஓட்டங்களை பெற்றார்.

ஆனால் அந்த ஓட்டங்கள் அணியின் வெற்றிக்கு போதவில்லை.

பந்து வீச்சில் சொயிப் மலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் ஆட்ட நாயகனாக தெரிவானார். அதேபோன்று வஹிந்து ஹசரங்க தொடர் நாயகனாக தெரிவானர்.

இந்த போட்டித்தொடர் குறித்து கருத்து வெளியிட்ட யாழ் அணித்தலைவர் திசிர பெரேரரா ” தமது அணியின் உரிமையாளர் ஆனந்தன் அவர்கள் முழு பங்களிப்பை வழங்கியதாக சொன்னார்.”

administrator

Related Articles