சர்ச்சையை ஏற்படுத்திய சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழப்பு

சர்ச்சையை ஏற்படுத்திய சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழப்பு


இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டுவன்ரி-20 போட்டியின் போது இந்திய வீரர் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சாம் குரானின் பந்து வீச்சில் இளம் வீரர் மாலனிடம் சூர்யகுமார் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த பிடியெடுப்பு குறித்து மூன்றாம் நடுவர் அளித்த தீர்ப்பு குறித்து சர்வதேச வீரர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பந்து தரையில் பட்டதன் பின்னரே மாலன் பிடியை எடுத்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்தர் ஷெவாக் இந்த ஆட்டமிழப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

administrator

Related Articles