சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் டோக்கியோ பயணம்!!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் டோக்கியோ பயணம்!!

ஒலிம்பிக் போட்டிகளை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தோமஸ் பெக் டோக்கியோ விஜயம் செய்கிறார்.

கொவிட் 19 காரணமாக மார்ச் மாதம் நடைப்பெற இருந்த . ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்பட்டன. கடந்த ஏழரை மாதங்களுக்கு பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பம் குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளது.

இதற்காகவே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டோக்கியோ செல்கிறார்.இரண்டு தினங்கள் அங்கு தங்கியிருக்கும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுவார்.

அடுத்த வருடம் குறிப்பிட்ட தினத்தில் போட்டிகள் ஆரம்பமானால் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 11 ஆயிரம் விளையாட்டு வீரர்களுடன் பல்லாயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களும் டோக்கியோ விஜயம் செய்வார்கள்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாவிடின் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என.நம்படுகிறது.

administrator

Related Articles