சர்வதேச மகளிர் தினத்தில் இளம் பெண் தீயிட்டு தற்கொலை!!

சர்வதேச மகளிர் தினத்தில்  இளம் பெண் தீயிட்டு தற்கொலை!!

(ஷமி மண்டூர்)


தனக்குத்தானே தீயிட்டு தற்கொலைக்கு முயற்சிசெய்த இளம் குடும்பப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நெச்சிமுனை இசைநடனக்கல்லூரி வீதி,முதலாம் குறுக்கு வீதியினைச்சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான அஜந்தன் லோஜினி வயது (27) என்பவரே நேற்று (7) மாலை கணவருடன் ஏற்பட்ட சிறு தகராற்றினால் தனக்குத்தானே மண்ணெண்னையினை ஊற்றி தனது வீட்டின் அறையில் தீயிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் தீக்காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக விசாரணையின் போது அறியமுடிந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

administrator

Related Articles