சாரயம், பியர் குடித்து போராடவில்லை! காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தலா 20 லட்சம் ரூபா நஷ்ட ஈடு, அருண் சித்தார்த்!!

சாரயம், பியர் குடித்து போராடவில்லை! காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தலா 20 லட்சம் ரூபா நஷ்ட ஈடு, அருண் சித்தார்த்!!

” பியர் சாரயம் குடித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களை போன்று நாம் உண்ணாவிரதம் இருக்கவில்லை , எமது உண்ணாவிரதம் உண்மையானது நியாயமானது என யாழ் சிவில் அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவிக்கிறார்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா நட்ட ஈட்டை அரசாங்கம வழங்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தொடர போவதாக அவர் உறுதி அளித்தார்.

நீதியான முறையில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும்.  சர்வதேச ரீதியில் குற்ற விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற காரணங்களை முன்னிறுத்தி யாழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் அடையாள உணவு தவிப்பு போராட்டமொன்று நல்லூர் பின் வீதியில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது 

ஏராளமான மக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே . யாழ் சிவில் சமூகத்தின் தலைவர் அருண் சித்தார்த்  இதனை கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்

தற்பொழுது ஜெனீவாவில்மனித உரிமை மாநாடு இடம்பெற்றுவரும் நிலையில் , உண்மையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை காரியாலயம் கவனம் செலுத்துவதாக இருந்தால் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளால் செய்த குற்றமாக இருக்கலாம், புளாட் டெலோ , ஈபிஆர்எல்எஃப், ஈபிடிபி போன்ற தமிழ் ஆயுதக்குழுக்களாள் செய்யப்பட்ட குற்றங்கள் எல்லாம் விசாரிக்கப்பட வேண்டும். இந்திய இராணுவத்தால் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட எல்லா குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும்.மனித உரிமை என்று அவர்கள் யோசிக்கும் பொழுது உண்மையில் சகல விதமான மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

அது தண்டனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லாது விட்டால் நாடு என்ற ரீதியில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிந்துவிட்டது. மேற்கொண்டு எங்களுடைய நாட்டுக்கு ஏற்ற விதத்தில் உள்ளக ரீதியாக ஒரு பொறிமுறையை அமைத்து நாங்கள் மேற்கொண்டு நாடு என்ற ரீதியில் முன்னேறுவதற்கான உதவிகளை இந்த மேற்குலக நாடுகள் வழங்கப்பட வேண்டும்.

வெறும் எனவே ஒரு தரப்பினருடைய மனித உரிமை மீறல்களை பிடித்துக் கொண்டு இவ்வாறு பக்க சார்பான விசாரணை செய்வது நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். பலர் விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்ட கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சித்தார்த்தன் தலைமையிலான புளொட், பல்லாயிரக்கணக்கான குற்றங்களை செய்துள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களுடைய ஈபிஆர்எல்எப் பல்லாயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்டு இருந்தது. ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு உள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் குற்றங்களை செய்துவிட்டு பாராளுமன்றம் சென்று விட்டால் குற்றங்கள் மறைக்கப்பட்டதா அர்த்தப் படமாட்டாது. அனந்தி சசிதரன் அவளுடைய கணவன் ஏழிழன் இருக்கும் பொழுது தான் மாவிலாறு அணைக்கட்டு பூட்டப்பட்டு பாரிய யுத்தம் இடம் பெற காரணமாக இருந்தது. அவரும் செல்கிறார் மனித உரிமை ஆணையத்துக்கு. உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தான விடயம். எங்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடையாது. குற்றங்கள் செய்தவர்கள் அனைவரும் மனித உரிமை கேட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த மாதிரியான நிலைப்பாடு மாற்றப்பட்டு உண்மையான பக்கசார்பற்ற நியாயமான பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் காணமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா நஷ்ட வழங்க வேண்டும். அதற்காக தாம்  நடவடிக்கை எடுக்க போவதாக   அருண் சித்தார்த்  தெரிவித்தார்.

administrator

Related Articles