சிம்பாபேயை சாய்த்த ஆப்கானிஸ்தான்

சிம்பாபேயை சாய்த்த ஆப்கானிஸ்தான்

சிம்பாபே அணிக்கு எதிராக அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை கைப்பற்றிய சிம்பாபே முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பாக துடுப்பர்ட்டத்தில் ரகஹமத்துல்லா குருபாஸ் 87 ஓட்;டங்களை விளாச அஸ்கஹர் ஆப்கான் 55 ஓட்டங்களை பெற்றார்;.

சிம்பாபேயின் பந்து வீச்சில் ரிச்சட் நகார்வா மற்றும் முசாராபனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 199 என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலளித்த சிம்பாபே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்று 48 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டினாசே கமுன்{ஹகாம்வே அதிகூடிய 44 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஆப்கான் அணியின் பந்து வீச்சில் ரசிட் கான் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக குருபாஸ் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் சிம்பாபே அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, மூன்றாவது போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

administrator

Related Articles