சிரேஷ்ட ஊடகவியலாளர் வரதன் கிருஸ்ணாவின் “வெந்து தணியாத பூமி” விரைவில் !!!

சிரேஷ்ட ஊடகவியலாளர் வரதன் கிருஸ்ணாவின் “வெந்து  தணியாத பூமி” விரைவில் !!!

சிரேஷ்ட ஊடகவியலாளரான வரதன் கிருஸ்ணாவின் ” வெந்து தணியாத பூமி” விரைவில் உலகம் முழுவதும் வெளிவர இருக்கிறது.

மலையகத்தில் பிறந்து வளர்ந்து போராட்ட களத்தில் பல்வேறு புரட்சிகளை செய்து பின்னர் சிறைவாசம் அனுபவித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் வரதன் கிருஸ்ணா எழுதிய இந்த புத்தகம் தமிழ் உலகில் புதிய சரித்திரம் படைக்க போகிறது.

இது தொடர்பாக அவர் முக நூல் பதிவு வருமாறு

எனது கனவின் ஒருபகுதி நனவானது” “வெந்து தணியாத பூமி “

எனது இளமை காலங்கள் இனிதான காலமாக இருக்கவில்லை அது ஒரு மாற்று அரசியலை நோக்கிய பயணம். துன்பங்களையும் துயரங்களையும் எதிர்க்கொண்ட காலம். (நான் மட்டுமல்ல ) எனினும் அது ஒரு வரலாறாக மட்டுமே எமக்கு விட்டுச்சென்றுள்ளது . மலையக அரசியல் போராட்ட வரலாறு என்பது இலங்கை வாழ் சமூகங்களுக்குள் இருந்து வேறுபட்ட ஒன்றாகும். அடிப்படை தேவைகளுக்கே எம்மவர்கள் போராட வேண்டிய நிலை இன்றும் தொடர்கின்றது. போராட்டமும் வாழ்வும் ஒன்றோடு ஒன்று இன்றுவரை ஒன்றிப்போயே இருக்கின்றது.

எமது சமூகம் எதிர்நோக்கிய அரசியல் மற்றும் போராட்ட வரலாற்றில் பெரும்பகுதி வெளிக்கொணராமல் விட்டுப்போய்தான் உள்ளன.
பொதுவான வாழ்க்கைமுறை தொடர்புபட்ட நாவல்களாக, நாட்டார்பாடல்களாக, ஒப்பாரி பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள் என எழுதப்பட்டுள்ளன அவை எமது கலாசார விழுமியங்களுடன் எப்போதும் இருந்தவைதான்.

அதற்கு அப்பால் எமது அரசியல் உரிமைகள் அடிப்படை உரிமைகள் என உண்டு. இவைக்கு அப்பால் மறந்துபோன அல்லது சொல்லப்படாத ஒரு வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நீண்டகாலமாக என்னை குடைத்துக்கொண்டிருந்து அதற்கான காலம் இந்த கொரோனா” காலம் கைக்கொடுத்தது. வீட்டுக்குள் முடங்கியிருந்த காலத்தை வீணடிக்காமல் எம்மவர்கள் அறிந்துகொள்ளாத பல விடயங்களை இன்றைய இளைய சமூகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தோடு எழுதி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களின் அணிந் துரையும் மூத்த செய்தியாளரும் ஆய்வாளருமான ஒருவரின் ஆய்வுரையோடு மலையகத்தில் சமூக செயல்பாட்டாளாராக செயற்படும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம்பெற்ற நம்மவரின் விமர்சன உரையோடு வெளிவருகின்றது. இந்த நூலை எழுத எனக்கு உற்சாகமூட்டிய சமாதானத்துக்கான கனேடியர்கள் இலங்கை சார்பு என்ற அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனா காரணமாக வெளியீடு தொடர்பில் காலம் தீர்மானிக்கப்படவில்லை. என கூறியுள்ளார்.

administrator

Related Articles