சிவாஜிலிங்கத்தின் சங்கானை வீட்டை பரமாரித்த வயோதிபர்கள் மீது வாள் வெட்டு !

சிவாஜிலிங்கத்தின் சங்கானை வீட்டை பரமாரித்த வயோதிபர்கள் மீது வாள் வெட்டு !

(நிருபர் பிரதீபன்-)

சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (27) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் சிவாஜிலிங்கம் என்பவரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என்று விசாரணையில் ​தெரியவந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் கொள்ளையிட்டமை தொடர்பிலும் தகவல்கள் இல்லை என்றும் பொலிஸார் கூறினர்.

மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

administrator

Related Articles