சீமானுக்கு எதிராக கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

சீமானுக்கு எதிராக கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகர் விஜய் ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடக்கம் முதலே ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். அதுபோல, கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவரையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார். இந்தநிலையில், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்கினால் தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம் என்று பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு இன்று பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது’ என்று மிகக் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

சீமானின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விஜயின் ரசிகர்கள் சீமானுக்கு எதிரான ஹேஷ்டேக் ஒன்றை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்தும் பிளக்ஸ் பேனர்களை அடித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

administrator

Related Articles