சுனாமிக்கு இன்று 16 வயது

சுனாமிக்கு இன்று 16 வயது

9.1 – 9.3 ரிக்டர் அளவில் இந்துனோசியாவின் சுமாத்திரா தீவில் பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை ஏற்பட்டு ஆசிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.

அதாவது இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், தாய்லாந்து, அந்தமான் தீவுகள் உள்ளிட்ட 14 நாடுகளில் சுனாமி கோரத்தாண்டவம் ஆடியது.

இதனால் இலங்கையில் 30,196 பேர் பலியானதுடன், முழு ஆசியாவிலும் 2 இலட்சத்து 27 ஆயிரத்து, 898 பேர் உயிரிழந்தனர்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளன.

விசேடமாக காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles