‘சுல்தான்’ இயக்குநர் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

‘சுல்தான்’ இயக்குநர் திருமணம்:  பிரபலங்கள் வாழ்த்து

“சுல்தான்’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் திருமணத்துக்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘ராஜா ராணி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் பாக்யராஜ் கண்ணன். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘சுல்தான்’ படப்பிடிப்பின்போதே இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று (அக்டோபர் 26) இவர்களுடன் திருமணம் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

‘சுல்தான்’ குழுவினர் பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும், அட்லி மற்றும் பாக்யராஜ் கண்ணனின் நண்பர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணத்தால் பலரும் நேரில் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.

administrator

Related Articles