சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்

சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்

ஒரு ரூபாய் கொடுத்து விமானத்தில் பயணம் செய்யலாம் ஆனால் அதே ஒரு ரூபாய் கொடுத்து படத்தை   பார்க்க  முடியாதது தான் நம்ம கவலை.முதலில் அதை செய்ங்க சூர்யா சார் .. இப்படி நம்ம மைன்ட் சொல்கிறது.


அந்த படத்தை பற்றி நான் எதாவது சொல்ல வேண்டுமே… வாசிங்க
” டேய் நெடுமாறா உங்க  அப்பா  இழுத்து கொண்டிருக்காருடா  நீ.. வந்து முன்னாடி நின்டா  நிம்மதியா போவாரு ”  என அம்மா ஊர்வசி தனது மகன் நெடுமாறானிடம் (சூர்யா) கண்ணீருடன் தொலைபேசியில் கேட்பார்
அப்பாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீண்ட காலம் பேசாத பையன்  அப்பா கண்ணை மூடுவதற்கு முன் பார்க்க வேண்டும் என்ற மன நிலையோடு விமான படை வீரரான நெடுமாறான் தனது பிரண்டஸ் கொடுத்த 6 ஆயிரம் ரூபா காசோடு விமான நிலையம் நோக்கி ஓடுகிறான்.

அவனுடைய கெட்ட நேரம் விமான நிலையத்தில  முதலாம் வகுப்பு சீட் மாத்திரம் தான் இருக்கு.  அந்த டிக்கெட்டை எடுக்க அவன் கையில் இருக்கிற பணம் போதாது அப்பா கண்ணை மூட முன் பார்க்க போக வேண்டுமானால் முதல் வகுப்பு டிக்கட் வாங்க வேண்டும்.
 அதற்கான  பணம் அவனிடமில்லை , அங்கே இருந்த ஏனைய பயணிகளிடம் ஓடிபோய் கடன் கேட்கிறான் நெடுமாறான்.


பயப்புள்ள ஒருத்தனும் ஒத்த சதமும் கொடுக்க இல்ல. உடனே முடிவு எடுக்கிறான் நெடுமாறான் ஏழைகளுக்கு குறைஞ்ச கட்டணத்தில பயணம் செய்ய கூடிய வகையில விமான சேவையை ஆரம்பிக்க வேணும் இதை நிறைவேற்ற வெறியாக புறப்படுகிறான்
குறிப்பாக ஒரு ரூபாய் கட்டணத்தில் ஏழைகள் விமானத்தில பயணம் செய்ய வேண்டும் என்பதே நெடுமாறனின் கனவு.
அதற்காக பல திட்டங்களை போடுறான் அவனுக்கு உதவியாக மனைவி, நண்பர்கள் மட்டுமல்ல ஊர் மக்களும் சேர்ந்து கொள்கிறார்கள்
அப்படியான ஒரு ஊரு நமக்கு இருந்திருந்தால் நாமும் முன்னேறி இருப்போமே என்று நினைக்க தூண்டும்.


இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவானது .கப்டன் G.R கோபிநாத் என்பவரின் வாழ்க்கை தான் படத்தின் மைய  கதை. 
நல்லா திரைக்கதை சில இடங்களில் நமக்கே அழுவ வருது. 
படத்தில நடிச்ச அனைவருக்கும் ஒரு ரூபாய் தங்க காசு கொடுக்கலாம்.  இசையமைப்பாளரான ஜீ.விக்கு  தங்க சங்கிலி கொடுக்க சொல்லுங்க. 
அக்கா சுதா கொங்கராவ் லெவல் வேற படம் நம்மலையும் வானத்தில பறக்க வைக்கிற மாதிரியே இருந்திச்சு . 


சூரரைப்போற்று..  வானத்தில் அனல் காற்று

administrator

Related Articles