பரோட்டா கடையில் வேலை பார்த்த தீப்பெட்டி கணேசன்!! அவரது திடீர் மரணம்! கலங்க வைக்கும் காரணம்!

பரோட்டா கடையில் வேலை பார்த்த தீப்பெட்டி கணேசன்!!   அவரது திடீர் மரணம்! கலங்க வைக்கும் காரணம்!

நடிகர் தீப்பெட்டி கணேசனின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் வெளிளியாகியுள்ளது.

ரேனிகுண்டா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் கார்த்தி என்கிற தீப்பெட்டி கணேசன். தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை, கோலமாவு கோகிலா என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்

கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன்.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட தீப்பெட்டி கணேசனுக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் உதவி செய்தனர். நடிகர் சங்கம் சார்பில் அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகள் நடைபெறாததால் பட வாய்ப்புகள் இன்றி பரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தார் தீப்பெட்டி கணேசன். ஜெய்ஹிந்துபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நேரத்தில் கவிஞர் சினேகன் அவர்களை பார்வையிட்டு நேரடியக சில உதவிகளை செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தீப்பெட்டி கணேசன்

அவருக்கு 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஜெய்ஹிந்து புரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீப்பெட்டி கணேசனின் மறைவை அறிந்த திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்’.

இவரது உடலுக்கு தி.மு.க இளைஞர் அணிச்செயலாளரும் நடிகருமான உதய நிதி ஸ்டாலின் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை உதவும் மனம் கொண்ட நடிகர் லாரன்ஸ் கணேசனின் கல்வி செலவை முழுமையாக பொறுப்பேற்பதாக டூவிட்டர் மூலமாக அறிவித்துள்ளார்

தீப்பெட்டி கணேசன் இறுதியாக வழங்கிய மனதை உறுக்கும் பேட்டி உங்களுக்காக

administrator

Related Articles