செல்வநாயக புரத்தில் உள்ளக பயிற்சி விளையாட்டரங்கு !!

செல்வநாயக புரத்தில் உள்ளக பயிற்சி விளையாட்டரங்கு !!

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக பயிற்சி விளையாட்டரங்கு (24) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் வீரர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதற்காக ஆறு மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டதுடன் கிழக்கு மாகாண விளையாட்டபிவிருத்தி திணைக்களத்திற்காக ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலம் இதற்கான நிதி செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட சில விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் ஆளுநரினால் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் என்.எம்.நெளபீஸ், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை தவிசாளர் ரட்டாயக்க , கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை தலைவர் ஜனார்த்தனன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

administrator

Related Articles