செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “ஆயிரத்தில் ஒருவன் 2”

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “ஆயிரத்தில் ஒருவன் 2”

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ரீமாசன், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றுப் பின்னணியில் புனைக் கதையாக உருவாக்கப்பட்டு இருந்தது.

இது ஒரு வரலாற்று பின்னணியை கதைக் களமாகக் கொண்ட படம் என்பதால் வெளியான போது ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

ஆனால் சில ஆண்டுகளில் சினிமா பிரியர்களுக்கு மிகவும் பிடித்த படமாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மாறியது. இதனால் படத்தின் இயக்குனரான செல்வராகவனிடம் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.

இந்தநிலையில், புத்தாண்டு தினமான நேற்று ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதை உறுதி செய்து செல்வராகவன் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் போஸ்டரை வேறொரு mathieu lauffray என்ற ஆங்கில  புத்தகத்தின் போஸ்டரோடு ஒப்பிட்டு மீம் கிரியேட்டர்ஸ்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த இரண்டு புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தற்போதைய சூழ்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

administrator

Related Articles