‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ பட கதாசிரியர் ஈரோடு செளந்தர் மரணம்!

‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ பட கதாசிரியர் ஈரோடு செளந்தர் மரணம்!

இயக்குநரும் பிரபல கதாசிரியருமான ஈரோடு செளந்தர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இதனையொட்டி திரைத்துறையினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினி, கமல்ஹாசன் என தமிழின் ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கிய கே.எஸ் ரவிக்குமாரின் இரண்டாவது படம் சேரன் பாண்டியன். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல, அவரது இயக்கத்தில் வெளியான ’நாட்டாமை’ வசூல் சாதனை செய்து அவரை முன்னணி இயக்குநராக்கியது.

இந்த இரண்டு படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர்தான் இயக்குநர் ஈரோடு செளந்தர். இதுமட்டுமல்ல இதே கே.எஸ் ரவிக்குமாரின் பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்டப் படங்களுக்கும் கதை வசனம் இவரேதான். கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ’முதல் சீதனம்’, 1998 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சிம்மராசி’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் ஈரோடு செளந்தர். முதல் சீதனம் படத்தில் வரும் ‘எட்டு மடிப்பு சேலை’ பாடல் இப்போதும் கிராமங்களில் ஒலிக்கப்படும் சூப்பர் ஹிட் காதல் சோகக்கீதம்.

administrator

Related Articles