சாஹலின் பந்துக்கு தடுமாறிய சன்ரய்ஸ் ஐதரபாத் !!

சாஹலின் பந்துக்கு தடுமாறிய சன்ரய்ஸ் ஐதரபாத் !!

அனுபவம் வாழ்க்கையின் சிறந்த பாடம் என்பதற்கு நேற்றைய ஆட்டம் சரியான உதாரணம் என்றே சொல்லலாம்.

ஒரு கட்டத்தில் ஹதரபாத் இலகுவாக வெற்றிப்பெற கூடிய நிலையில் இருந்தது.

15. 2 ஓவர்களில் 121 ஓட்டங்களை இரண்டு விக்கெட் இழப்பிற்கு பெற்றிருந்த ஐதரபாத் அணிக்கு மேலும் 43 ஓட்டங்களே தேவையாக இருந்தது .

இந்த ஓட்டத்தை இலகுவாக புள்ளைங்கோ எடுப்பாங்க என்று நினைச்ச போது வௌவால் போல பந்து வீச வந்தாரு தம்பி சாஹல்  அவர் போட்ட பந்துக்கு வெள்ளைக்கார துரை பெயார் ஸ்ரோ அடிச்சாரு பாருங்க அது சிக்ஸருக்கு போகாமல் அப்படியே விக்கெட்டுக்கு போனது.

அவர் கிளின் போல்ட் ஆனார் அப்போது  பெற்ற ஓட்டம் 61  கொஞ்சம் கவனமாக ஆடி இருந்தால் அணி வெற்றி பெற்று இருக்கும்.

போன பஸ்க்கு கை காட்டி என்ன பயன் அடுத்தாக விஜய் சங்கர் தளபதி விஜய் போல ஸ்டைல வந்து பெயில ஆட்டமிழந்து போனாரு.

சௌவால் பந்தில் நம்ம மணிஸ் பாண்டேயும் ஹதரபாத்  அணி 89 ஓட்டங்கள் பெற்ற போது இழந்ததையும் சொல்ல வேண்டும்.

முதல் போட்டியிலே இப்படி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு தடுமாறின ஹதரபாத் அடுத்த போட்டிகளில் எப்படி விளையாடும் என்பதே ரசிகர்களின் கேள்வி குறி.

ஸ்கோர் விபரம்

டாஸில் வென்ற ஐதரபாத் அணி முதலில் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை துடுப்பாட அழைத்தது.

இதன்படி  முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163  ஓட்டங்களை பெற்றது.

இதில் டிவிலயர்ஸ் 51 ஓட்டங்களையும் படிக்கால் 56  ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில்  எல்லோரும் எதிர்பார்த்த ரசிட் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இது ஹதரபாத் அணிக்கு பாதிப்பு என்றே சொல்ல முடியும்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹதரபாத் அணி  19.4 ஓவர்களில்  சகல விக்கெட்டுகளையும் இழந்து 153  ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதில் பெயார் ஸரோ 61 ஓட்டங்களையும் பாண்டே 34 ஓட்டங்களையும்  பெற்றனர்.

பந்து வீச்சில் சாஹல்  மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

administrator

Related Articles