ஜனாஷாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லை!அங்கஜன் ( video)

ஜனாஷாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லை!அங்கஜன் ( video)

ஜனாஷாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லை என பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (05) மருதங்கேணிப் பிரதேசத்தில் இடம்பெற்ற “செளபாக்கியா உற்பத்தி கிராமம்” அங்குராட்ப்பணம் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும்

இரணைதீவு மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு தற்போது தான் படிப்படியாக வாழ்வாதார ரீதியாக முன்னேறி வருகின்றனர். அண்மையில் இரணைதீவில் கடலட்டை உற்பத்திக் கிராமம் ஒன்றும் கடற்றொழில் அமைச்சர் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமும் பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் ஊடாகவும் அந்த மக்கள் மீளவும் தமது வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்சிக்கும் வேளையில் கோவிட் – 19 வைரஸ் நோயினால் இறந்த இஸ்லாமியர்களது ஜனாஸாக்கள் புதைப்பு என்பது அந்த பகுதிக்கு பொருத்தமற்றது.

எனவே இந்த விடயம் சம்பந்தமாக நிச்சயமாக அரசாங்கத்திற்கு எமது கருத்துக்களைத் தெரிவித்து மீள்பரிசீலனை செய்யக் கோருவதற்கு தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles