ஜிம் மாஸ்டர் மீது வாள் வெட்டு !! மல்லாகம் பரப்பரப்பு!!

ஜிம் மாஸ்டர் மீது வாள் வெட்டு !!  மல்லாகம் பரப்பரப்பு!!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்றிரவு 9.00 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது குறித்த வன்முறை நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்ட குழு அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

administrator

Related Articles