ஜெர்மனிய பாதசாரிகள் மீது லேன்ட் ரோவர் மோதியதில் 9 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி! பத்துக்கு மேல் காயம்! (VIDEO)

ஜெர்மனிய பாதசாரிகள் மீது லேன்ட் ரோவர் மோதியதில் 9 மாத குழந்தை உட்பட  5 பேர் பலி!  பத்துக்கு மேல் காயம்! (VIDEO)

(அனஸ்லி ரட்ணசிங்கம்)

ஜெர்மனி தென்மேற்கு பகுதியிலுள்ள டிரையர் நகரில் இன்று இந்த கொடூர விபத்து இடம்பெற்றதாக ஜெர்மன் செய்தி பிரிவின் பொறுப்பாளர் அனஸ்லி ரட்ணசிங்கம் கூறுகிறார்.

வாகனத்தை ஓட்டிய 51 வயதான ஜெர்மனிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் போதை பாவனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது 1. 4 புரொமில் கண்டு பிடிக்கப்பட்டது.

விபத்தை மேற்கொண்டவர் மன அழுத்தற்கான சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

வாகனம் அவருக்கு சொந்தமானது அல்ல என ஆரம்ப விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் இலங்கையர்கள் காயமடைந்தார்களா என்பது குறித்து இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை என எமது செய்தியளர் அனஸ்லி ரட்ணசிங்கம் கூறினார்.

administrator

Related Articles